புதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக நிதி ஒதுக்கீடு - Tamil News புதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக நிதி ஒதுக்கீடு - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » புதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக நிதி ஒதுக்கீடு

புதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக நிதி ஒதுக்கீடு

Written By Tamil News on Saturday, December 15, 2012 | 5:36 PMஎதிர்வரும் ஆண்டில்  இந்து கோயில்களுக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் அலரிமாளிகையில் ஜனதிபதியுடனான இந்து மத தலைவர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கியதாக முன்னாள் மாநகரசபை உறுப்பினர் என்.ரவிகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'2012ஆம் ஆண்டிற்கு 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி இந்து கோயில்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அது போன்று இந்து மத விசேட நாட்களில் அரசாங்க சார்பாக பல நிகழ்வுகள் விமர்சையாக நடத்தப்பட்டுள்ளன. இந்த தொகை பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களின் விகிதாசாரத்துடன் ஒப்பிடும் போது அதிகமான நிதி ஒதுக்கீடு இந்து மதத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

 இந்நாட்டின் ஜனாதிபதி தலைமையிலான மத நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. அது மட்டுமின்றி 2013ஆம் ஆண்டு மேலதிக நிதி ஒதுக்கீடு எமக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. காலங்காலமாக அரைகுறையாக கட்டப்பட்டிருக்கும் பல கோயில்களை இதன் மூலம் கட்டி முடிக்கக்கூடியதாக இருக்கும். புனரமைக்கப்பட வேண்டிய கோயில்கள் பல புனரமைக்கப்படும். தோட்டப்புறங்களிலுள்ள மக்களுக்கான இந்து மத ஆலயங்களிலுள்ள குறைபாடுகள் நீக்கப்படும்.

தேவையை உணர்ந்து ஜனாதிபதியின் ஆலோசனையின்படி பிரதமரின் கீழ் உள்ள அமைச்சின்; மூலமாக சிறந்த சேவையினை வழங்கி வரும் இந்து சமய திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி திருநாவுகரசை நாம் பாராட்ட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் ஆலோசனைக்கமைய அடுத்த வருடம் பல கோயில்களை திருமதி. சாந்தி திருநாவுகரசுவின் மேற்பார்வையில் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது' என்றார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger