இயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி - Tamil News இயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி

இயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி

Written By Tamil News on Wednesday, December 12, 2012 | 7:18 PMஆஸ்துமா பரம்பரை நோயாகவும் வரலாம். அல்லது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம்.

மேலும் தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இரசாயன கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.

மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடு தொடா, தூதுவளை, முருங்கையிலை போன்ற மூலிகைகள் அனைத்தையும் வெயிலில் உலர்த்தி பொடி செய்து சம அளவில் ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத போத்தலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றில் இருந்து ஒரு கரண்டி தூள் எடுத்து ஒரு குவளை தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட்கொண்டால் நோயிலிருந்து பூரணகுணம் பெறலாம்.
Share this article :

1 comment:

Unknown said...

aasthuma and t b noi rendumey orey viyathi thana therinthal sollungal

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger