இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இராணுவ தளபதி விளக்கம் - Tamil News இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இராணுவ தளபதி விளக்கம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இராணுவ தளபதி விளக்கம்

இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இராணுவ தளபதி விளக்கம்

Written By Tamil News on Saturday, December 15, 2012 | 5:07 PMசில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியிலிருந்து இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களை அவர்களின் பெற்றோர் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை என இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இராணுவம் பதிலளித்துள்ளது.

எனினும், பயிற்சியில் உள்ளவர்களை வாரத்தில் ஒரு நாள் குறித்த நேரத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வேளையில், பார்வையாளர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் விரும்பிய நேரத்தில் பயிற்சி பெறுபவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்களேயானால் எம்மால் ஓர் அர்த்தமுள்ள பயிற்சியை நடத்த முடியாமல் போகும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இது இராணுவ பயிற்சி பெறும் சகலருக்கும் பொதுவான நிபந்தனையாகும். இராணுவம் சகல பயிற்சியாளர்களையும் ஒரே விதமாகவே நடத்துகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 பயிற்சி பெறும் சகலருக்கும் இது பொதுவானது. ஒரு பொதுமகனாக இருந்தவரை இராணுவ வாண்மையாளராக மாற்றியெடுக்கும் செயன்முறையில் இது ஒரு பகுதியாகும் என அவர் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இராணுவம் நிறைவேற்றி வருகின்றது. இதன்படி வடக்கைச் சேர்ந்த இருபாலாரையும் இராணுவத்தில் சேர்க்க இராணுவம் தீர்மானித்தது.

வடக்கிலிருந்து 109 பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் எவருமே முன்னாள் போராளிகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger