ஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை - Tamil News ஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை - Tamil News
Headlines News :

Hottest List

Home » » ஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை

ஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை

Written By Tamil News on Saturday, December 29, 2012 | 6:42 PMஒரு காட்டில் உள்ள புலிகளை வேட்டையாட வேடன் ஒருவன் ஒரு பொறிக்-கூண்டை வைத்து. அதன் ஒரு பகுதியில் புலியைக் கூட்டிற்குள் கவருவதற்காக ஆடு ஒன்றையும் கட்டி வைத்திருந்தான்.

அவ்விடத்திற்கு வந்த புலி ஒன்று கூட்டில் இருந்த ஆட்டைக் கண்டது. ஆட்டிறைச்சி சாப்பிட ஆசைப்பட்ட புலி, ஆட்டைப் பிடிக்க பொறியாக வைக்கப் பட்டிருந்த கூட்டினுள் நுளைந்தது. உடனே கூட்டின் பொறி தட்டுப்பட கூட்டின் கதவு அடைபட்டது. புலி ஆட்டைப் பிடிக்கப் பாத்தது ஆனால் அதுவும் தனியாக ஒரு பகுதியில் இருந்ததால் ஆட்டையும் பிடிக்க முடியவில்லை. இப்போது புலி தான் கூட்டில் அகப்பட்டு விட்டதை புரிந்து கொண்டது.

அதனால் அவ் வழியால் யாராவது வந்தால் உதவி கேட்கலாம் என காத்திருந்தது. அப்போது அந்த கூட்டருகே ஒரு வழிப்போக்கன் போய்க்கொண்டிருப்பதை புலி கண்டது. உடனே புலி அவனை அழைத்து தனக்கு வெளியே வர உதவி செய்யும்படி கெஞ்சிக் கேட்டது.

அதற்கு அந்த வழிப்போக்கன் 'உன்னை நான் வெளியே வர உதவி செய்தால் நீ வெளியே வந்ததும் என்னை அடித்துக் கொன்று விடுவாயே! என்றது.

உடன் அந்தப் புலி 'நான் அப்படி செய்ய மாட்டேன்' என உறுதி கூற, அந்த வழிப்போக்கனும் கூண்டின் கதவை திறந்து புலியை வெளியே விட்டான். வெளியே வந்த புலி, எனக்கோ சரியான பசி.உன்னைத்தான் கொல்லப் போகிறேன்' என்றவாறு வழிப்போக்கன் மீது பாயத் தயாராகியது.

உடனே அவ் வழிப்போக்கன் புலியின் உறுதிமொழியை ஞாபகப் படுத்தியது. 'என் உயிரை காப்பாற்றிக் கொள்ள அளித்த உறுதி அது' என்றது புலி.

அந்த நேரம் ஒரு நரி அவ்விடத்திற்கு வந்து. நடந்த விஷயங்களை கேட்டு அறிந்தது.

வழிப்போக்கனைக் காப்பாற்ற விரும்பிய நரி, புலியைப் பார்த்து ' நான் நல்ல தீப்பு கூறுகிறேன் ஆனால் நீங்கள் இருவரும் நடந்தவற்றை அப்படியே செய்துக் காட்டுங்கள்' என்றது.

புலியைப் பார்த்து. 'நீங்கள் கூண்டிற்குள் எங்கு இருந்தீர்கள்?' என்றது.

புலியும் கூண்டினுள் சென்று.'இங்குதான்' என்று சொல்லும் போதே நரி மீண்டும் கூண்டை மூடியது. புலி இப்போது மீண்டும் கூண்டுக்குள் மாட்டிக் கொண்டது.

நரி புலியைப் பார்த்து சொல்லிற்று. 'உங்களைக் காப்பாற்றிய இந்ந்த மனிதனையே கொல்லத் துணிந்ததற்கு இதுதான் தண்டனை'

பின் வழிப்போக்கனைப் பாத்து, 'ஒருவருக்கு உதவி செய்யுமுன் (காப்பாற்றுமுன்) அவரின் குணத்தை அறிந்துக் கொள்ள வேண்டும். தீய குணம் உள்ளவர்களுக்கு உதவக் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றது.

நாமும் தீய குணம் உள்ளவர்களுக்கு உதவினால் துன்பத்தில் மாட்டிக் கொள்ள வேண்டி வரும். ஒருவரின் குணம் அறிந்து உதவ வேண்டும்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger