சப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம் - Tamil News சப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » சப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்

சப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்

Written By Tamil News on Wednesday, December 26, 2012 | 7:41 PMஇனிப்பு சுவை அதிகமுள்ள சப்போட்டா பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் சி மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ள சப்போட்டா பழம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இந்த பழத்தில் நார் சத்து உள்ளதால் செரிமாணத்துக்கு உதவுகிறது. புரோட்டின், இரும்பு சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது. கண்பார்வையை அதிகரிக்கும். தோல் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள் இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்

இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.

கேன்சரை தடுக்கும் ஆற்றல் உடையது சப்போட்டா. இதுபோன்று உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்ல சப்போட்டா பழங்கள் குறைவான விலைக்கு கிடைக்கின்றன. எனவே, சப்போட்டா பழத்தை நாமும் சாப்பிட்டு பயன் பெறலாமே. மிகவும் கனிந்த மற்றும் அழுகிப்போகும் நிலையில் உள்ள சப்போட்டா பழங்களை சாப்பிடுவதை தவிர்த்து, நல்ல நிலையில் உள்ள சப்போட்டாவை வாங்கி சாப்பிடலாம்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger