கொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்டமா? - Tamil News கொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்டமா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » கொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்டமா?

கொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்டமா?

Written By Tamil News on Thursday, December 20, 2012 | 12:22 AM


விடுதலைப்புலிகள் அமைப்பு மேற்கொண்ட பாரிய திட்டம் காரணமாகவே கொழும்பு நகரில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம் என தெரியவந்துள்ளதாக அரசசார்பு சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள புலிகளின் 17 சொத்து விற்பனை நிறுவனங்கள் கொழும்பு நகரில் வசித்த சிங்கள குடும்பங்கள் வசித்த வீடுகளை கொள்வனவு செய்து, தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்தன.

இந்த வீடுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தமிழர்களும், வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை முதலீட்டுச் சபையில் பணியாற்றிய புலிகளுக்கு ஆதரவான உயர் அதிகாரி ஒருவரின் உதவியுடன், புலிகளின் நிறுவனங்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளனவன்னி இராணுவ நடவடிக்கைக்கு பின்னர், குறித்த அதிகாரி நாட்டில் இருந்து வெளியேறியதுடன், புலிகளின் நிறுவனங்களும் காணாமல் போயுள்ளன.

விடுதலைப்புலிகளின் நிறுவனங்கள் இலங்கையில் உள்ள 40 பாரிய நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளதுடன் அமெரிக்காவில் உள்ள வர்த்தகரான ராஜ் ராஜரட்னம் அவற்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை பெற்றிருந்தார் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் கொழும்பு நகரில், 40 வீத முஸ்லிம்களும், 33 வீத தமிழர்களும், 24 வீத சிங்களவர்களும் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
(லங்காசைபர்நியூஸ் 15-12)
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger