இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி! - Tamil News இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி! - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி!

இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி!

Written By Tamil News on Saturday, December 8, 2012 | 10:48 PM


இலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன.


பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்குமான சாத்தியக் கூற்றைக் கொண்ட துறையாக சுற்றுலாத்துறையானது அண்மைக் காலங்களில் வளர்முக நாடுகள் மத்தியில் அதிகமாக உணரப்பட்டு வருகின்றது. சுற்றுலாத் துறை என்பதற்குப் பல்வேறு வரை விலக்கணங்கள் காணப்படினும் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலாத்துறை நிறுவனம் அதைப் பின்வருமாறு வரைவிலக்கணம் செய்துள்ளது.

சம்பளம் பெற்றுக் கொள்ளும் எந்த செயற்பாட்டுடனும் தொடர் பில்லாத, பொழுது போக்கு, வணிகம் மற்றும் வேறு நோக்கங்களுக்காக, 24 மணித்தியாலங்களுக்கு குறை யாமலும் தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு மேற்படாமலும் தமது வழமையான சுற்றுச் சூழலுக்கு வெளியே சென்று அங்கு தங்குதலே ஓர் சுற்றுலாச் செயற்பாடாகும்.

மறுபுறத்தில், சொந்த இடங்களுக்கு அப்பால் பயணிக்கும் தனியார் மற்றும் குழுக்களுக்கு வழங்கப்படும் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, குடிவகை, சில்லறைக் கடைகள், உல்லாச வசதிகள், வேறு உபசரணை சேவைகள் ஆகியன அடங்கிய பயண அனுபவத்தை வழங்கும் செயற்பாடுகள், சேவைகள், தொழில்கள் என்பவற்றின் தொகுப்பே சுற்றுலாத் துறையாகும்.

முக்கியமான ஓர் சேவைத்துறைச் செயற்பாடாகவுள்ள இத்துறை ஸ்பெயின், பிரான்ஸ், மெக்ஸிக்கோ, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் ஏற்கனவே அதிசயங்களைத் தோற்று வித்துள்ளது. இருந்த போதிலும் உலகின் பல பகுதிகளில் பல அறிவுத் துறைகளுடன் தொடர்புபடும் வணிக மாக சுற்றுலாத்துறை ஆகிவிட்டது. உலகம், உயர்தரத்திலான பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றை நோக்கிச் செல்வதால், சுற்றுலாத்துறைச் செயற்பாடானது பொருளாதார ரீதியாக மிகுந்த வளவாய்ப்புக்களை கொண்டதாக மனிதச் செயற்பாடுகளால் அதிகளவுக்கு வழிப்படுத்தப்படுகின்றது.

உலகமயமாதல் மிகவும் முக்கியத் துவம் பெற்றுள்ள இப்புதிய பொரு ளாதார ஒழுங்கு காரணமாக சர்வதேச சுற்றுலாத்துறையின் வீச்சு விசாலித்து வருகின்றது என்றே கூறவேண்டும். வறிய மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் அந்நிய செலாவணி வருமானங்களைப் பெற்றுத் தருவ தாலும், சுற்றுலாப் பயண இலக் குகளுக்கு மறைமுகமாக அதிகளவு வாய்ப்புக்களைக் கொண்டு வருவதாலும் சர்வதேச சுற்றுலாத்துறை மேலதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

சுற்றுலாத்துறை தற்போது ஆண்டுக்கு ஒரு றில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் வருமானம் ஈட்டுகின்ற உலகின் மிகப் பெரிய தொழில்களில் ஒன்றாக உள்ளது. சர்வதேச வர்த்தகத்தின் வரிசைப் படுத்தலின் படி எரி பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் மோட்டார் வாகன உற்பத்திப் பொருட்கள் என்பவற்றிற்கு அடுத்து நான்காவது நிலையிலுள்ள ஏற்றுமதி வகையாக சுற்றுலாத்துறை உள்ளது.

1993- 2010 காலப் பகுதியில் உலக சுற்றுலாத்துறை வளர்ச்சியானது 04 சத வீதத்தை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடருமாயின் இரண்டு தசாப்தங்களில் சுற் றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்குகளாக அதிகரிக்கும். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது 1990 – 2000 காலப் பகுதியில் 2.9 சதவீதமாகவும், 2000-2008 காலப் பகுதியில் 3.2 சதவீத மாகவும் காணப்பட்டது.

ஆனால் ஆண்டுக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையின் வளர்ச்சி வீதம் 3.7 சதவீதமாகவும் உலகளவில் சுற்றுலாப் பயணிகளிட மிருந்து பெற்ற வருமானத்தின் வளர்ச்சி வீதம் 6.3 சதவீதமாகவும் இருந்து வருகின்றது. இதன் மூலம் சுற்று லாத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் விரைவாக, அதிலும் இச்சுற்றுலாத்துறையானது சேவைத் துறையில் அதிகளவுக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளபோதும், அச்சேவைகள் மற்றும் தயாரிப்புக் கைத்தொழில் போன்ற பரந்த துறை களை விடவும் விரைவாக வளர்வ தற்கான வள வாய்ப்பைக் கொண் டுள்ளதென உய்ர்த்தறிய முடிகின்றது.

இத்துறையானது ஒரு நாளைக்கு 03 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை நெருங்குவதாக உள்ளது. 2010 இல் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 935 மில்லியனாகக் காணப்பட்டது. இது 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 7 சதவீத வளர்ச்சியைக் காட்டுகின்றது. சுற்றுலாத்துறையானது உலக ஏற்றுமதி வர்த்தக சேவைகளில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகவும், மொத் தப் பொருட்கள் சேவைகளின் ஏற்று மதியில் 06 சதவீதமாகவும் உள்ளது.

சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஓர் உலகளாவிய ஒன்றிணை ப்பின் பலமான குறிகாட்டியாகவும் இது உள்ளது. 2020 அளவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.6 பில்லியனாக இருக்குமென உலக சுற்றுலா நிறுவனம் எதிர்பார்க் கின்றது.

அண்மைக் காலமாக பல பிராந் தியங்கள் குறிப்பாக ஆபிரிக்கா ஆசிய-பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் துரித வளர்ச்சிப் போக்கை காட்டுகின்றன. ஆனால் முன்பு பலமான நிலையில் காணப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களில் இவ்வாறான வளர்ச்சிப் போக்கை காணமுடிவ தில்லை.

உலக சுற்றுலாத்துறை, கடந்த இரண்டு தசாப்தங்களில் துரித வளர்ச்சிப் போக்கை காட்டியுள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் பிராந்தியங்களிலுள்ள இடங்கள், முக்கியத்துவம் பெற்று வருவதனால் உலக சுற்றுலாத்துறையின் போக்கு மாற்றங்கண்டு வருகின்றது. வளர்ந்து வரும் சர்வதேச சுற்றுலாத்துறை மூலம் உலகில் அதிகரித்துள்ள செல் வத்தை தமது பொருளாதார வளர்ச் சிக்காக தாமும் பகிர்ந்துகொள்ளும் வகையில் வளர்முக நாடுகள் உபாயங்களை வகுப்பதற்காக தமது கொள்கைகள் மற்றும் சுற்றுலாத் துறைக் கருவிகள் என்பவற்றை மாற்றியமைத்து வருகின்றன.

2011 இல் முன்னெப்பொழுதுமில்லாத மிக உயர்ந்த சுற்றுலா வருகையான 855,975 பதிவு செய்யப்பட்டதுடன் இது 2010 உடன் ஒப்பிடுகையில் 30.8 சதவீதமானதொரு வளர்ச்சியாகக் காணப்பட்டது. குறிப்பாக மிகக் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும் (171, 374)ஐக்கிய இராச்சியம் (106, 082), ஜேர்மனி (55, 882), பிரான்ஸ் (48, 695), மாலைதீவு (44, 018), அவுஸ்திரேலியா (41,728)ஆகிய நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு வருகை தந்தனர். மத் திய கிழக்கிலிருந்தான சுற்றுலா வருகைகளும் 33.2 சதவீதத்தினால் அதிகரித்தன.

2011இல் சுற்றுலாவிலிருந்து பெறப்பட்ட வருவாய்கள் . . டொலர் 830 மில்லியன் வரையில் அதிகரித்தது. இதனை முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 44.2 சதவீத அதிகரிப்பினை காட்டி நிற்கின்றது. 2010 இல் சுற்றுலாப் பயணி ஒருவரினால் இரவொன்றிற்கு செலவிடப்பட்ட சராசரித் தொகை ..டொலர் 88. 2011 இல் இது 97 ..டொலர் என்றளவிற்கு அதிகரித்துச் சென்றது. 2011 சுற்றுலா வருகையின் நோக்கத்தைப் பார்க்கும் போது 77% வீதத்தினர் விடுமுறையை கழிப்பதற்காகவும் 8% வீதத்தினர் வியாபார நோக்கங்களுக்காக வும் வருகை தந்ததுடன், மிகுதியினர் நண்பர்கள், உறவினர்களைப் பார்ப்பதற் காகவும், மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் சமய, கலாசார நோக் கங்களுக்காகவும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

'இலங்கைக்கு விஜயம் செய்யுங்கள்' 2011 நிகழ்ச்சித் திட்டம் புதிய சந்தை களிலிந்து சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கு உதவியது. சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு போன்ற தோற்றம் பெற்று வரும் சந்தைகளிலிருந்தான அதிகரித்த வருகைகள் 2011 இல் காணப்பட்டது. 2011 இல் இலங்கையின் 08 தனித் துவமான தொனிப் பொருட்களின் கீழ் சுற்றுலாத்துறை விருத்தி நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கடற்கரை, பாரம்பரியம், இயற்கை வனப்பு, கானக விலங்குகள், விழாக்கள், விளையாட்டு மற்றும் துணிகர சாகசங்கள், மகிழ்ச்சி மற்றும் சாராம்சங்கள் என்பவற்றின் கீழ் இடம்பெற்றன.

உற்பத்திச் சாதன அபிவிருத்திக்காக புதிய அமைவிடங்கள் குறிப்பாக கல்பிட்டி, பாசிக்குடா, டெருவ, குச்சவெளி ஆகிய இடங்களிலிருந்து வாகரை, யால, அம்பாந்தோட்டை, சிலாபத்துறை மற்றும் யாழ்ப்பாணம் வரை விரிவாக்கப்பட்டன. 2011 இல் புதிய சுற்றுலாச் சட்டமொன்று உருவாக்கப்பட்டது.

இது ஒரே சட்டத்தின் கீழ் தற் போதுள்ள 04 நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களாக அதாவது, இலங்கை சுற்றுலா அதகார சபை, இலங்கை சுற்றுலா நிறுவனம் மற்றும் சுற்றுலா விடுதி முகா மைத்துவம் என இரு நிறுவனங்க ளாக ஒருங்கிணைந்து விரைவாக வளர்ந்து வரும் சுற்றுலாக் கைத் தொழிலின் சவால்களை எதிர்கொள் வதற்காக பயிற்சி மற்றும் அபிவி ருத்திக்கான கூடியளவு வாய்ப்புக் களை வழங்க நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன.

பிரகாஷ்னிமோகன் பிரேமகுமார்
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger