யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந்த தடுப்பு முகாமிற்கு மாற்றம் - Tamil News யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந்த தடுப்பு முகாமிற்கு மாற்றம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந்த தடுப்பு முகாமிற்கு மாற்றம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந்த தடுப்பு முகாமிற்கு மாற்றம்

Written By Tamil News on Saturday, December 15, 2012 | 4:56 PM


 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்  கைதான பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் தடுப்புக்காவலுக்காக வெலிகந்த - கந்தகடுவ புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையானது அரசின் திட்டமிட்ட மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை' என புளொட் அமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

'ஜனநாயக உரிமைகளை மறுதலித்து எமது இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையின் தொடர்ச்சியாகவே இதனைக் காண்கின்றது' என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'யுத்தம் முடிவடைந்து விட்டது, இயல்புநிலையும் ஜனநாயகமும் மீளவும் வடக்கு கிழக்கில் நிலைநாட்டப்பட்டுள்ளது என கூறும் அரசு, பல்கலைக்கழக மாணவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற தன்மையையும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு பதட்டமான நிலைமையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

யுத்த சூழ்நிலைகளில் எவ்வளவோ இழப்புக்களுக்கும், கஸ்டங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில்தான் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றார்கள். இப்படியான அடக்குமுறைகள் மாணவர்களின் கல்வியினை பாழாக்கிவிடும். சமுதாயத்தில் மேன்மைநிலையை எட்டமுடியாத சூழல் வலிந்து உருவாக்கப்பட்டால் மாணவர்கள்; விரக்திநிலைக்கே தள்ளப்படுவார்கள்.

உரிமைகளுக்கு குரல் கொடுப்பதையும், இயல்புநிலைகள் எதையும் பாதிக்காமல் தங்களுடைய விடுதிகளிலேயே மிக அமைதியாக உணர்வுகளை வெளிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அரசு அடக்க முற்பட்டமையானது இன்று ஒரு பூதாகரமான பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.

எனவே, இந்த நிலைமைகளை நீடிக்க விடாமல், மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை தொடர்வதற்கு அனுமதியளித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்.'
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger