45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது - Tamil News 45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது - Tamil News
Headlines News :

Hottest List

Home » » 45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது

45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது

Written By Tamil News on Saturday, December 15, 2012 | 5:55 PM



10 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க முதியவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனது பெற்றோரின் கவனயீனம் காரணமாகவே இந்த சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பெற்றோரை தவறவிட்டு சிறுவன் ஒருவன் தவித்துக்கொண்டிருந்த கண்ட 45 வயதான முதியவர் அச்சிறுவனை தன்வசப்படுத்தி அழைத்துச்சென்று அச்சிறுவனுக்கு உணவு வாங்கிக்கொடுத்து ரயில் நிலைய மலசலக்கூடத்திற்குள் வைத்தே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 45 வயதான சந்தேக நபர் கோட்டை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் பாதிக்கப்ட்ட சிறுவனை மாகொல சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger