December 2012 - Tamil News December 2012 - Tamil News
Headlines News :

Hottest List

பழ வியாபாரியின் தந்திரம்! (சிறுவர் கதை)

Written By Tamil News on Sunday, December 30, 2012 | 6:42 PM


பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

நீதி :- வியாபாரி வியாபாரிதான்..!

ஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை

Written By Tamil News on Saturday, December 29, 2012 | 6:42 PM



ஒரு காட்டில் உள்ள புலிகளை வேட்டையாட வேடன் ஒருவன் ஒரு பொறிக்-கூண்டை வைத்து. அதன் ஒரு பகுதியில் புலியைக் கூட்டிற்குள் கவருவதற்காக ஆடு ஒன்றையும் கட்டி வைத்திருந்தான்.

அவ்விடத்திற்கு வந்த புலி ஒன்று கூட்டில் இருந்த ஆட்டைக் கண்டது. ஆட்டிறைச்சி சாப்பிட ஆசைப்பட்ட புலி, ஆட்டைப் பிடிக்க பொறியாக வைக்கப் பட்டிருந்த கூட்டினுள் நுளைந்தது. உடனே கூட்டின் பொறி தட்டுப்பட கூட்டின் கதவு அடைபட்டது. புலி ஆட்டைப் பிடிக்கப் பாத்தது ஆனால் அதுவும் தனியாக ஒரு பகுதியில் இருந்ததால் ஆட்டையும் பிடிக்க முடியவில்லை. இப்போது புலி தான் கூட்டில் அகப்பட்டு விட்டதை புரிந்து கொண்டது.

அதனால் அவ் வழியால் யாராவது வந்தால் உதவி கேட்கலாம் என காத்திருந்தது. அப்போது அந்த கூட்டருகே ஒரு வழிப்போக்கன் போய்க்கொண்டிருப்பதை புலி கண்டது. உடனே புலி அவனை அழைத்து தனக்கு வெளியே வர உதவி செய்யும்படி கெஞ்சிக் கேட்டது.

அதற்கு அந்த வழிப்போக்கன் 'உன்னை நான் வெளியே வர உதவி செய்தால் நீ வெளியே வந்ததும் என்னை அடித்துக் கொன்று விடுவாயே! என்றது.

உடன் அந்தப் புலி 'நான் அப்படி செய்ய மாட்டேன்' என உறுதி கூற, அந்த வழிப்போக்கனும் கூண்டின் கதவை திறந்து புலியை வெளியே விட்டான். வெளியே வந்த புலி, எனக்கோ சரியான பசி.உன்னைத்தான் கொல்லப் போகிறேன்' என்றவாறு வழிப்போக்கன் மீது பாயத் தயாராகியது.

உடனே அவ் வழிப்போக்கன் புலியின் உறுதிமொழியை ஞாபகப் படுத்தியது. 'என் உயிரை காப்பாற்றிக் கொள்ள அளித்த உறுதி அது' என்றது புலி.

அந்த நேரம் ஒரு நரி அவ்விடத்திற்கு வந்து. நடந்த விஷயங்களை கேட்டு அறிந்தது.

வழிப்போக்கனைக் காப்பாற்ற விரும்பிய நரி, புலியைப் பார்த்து ' நான் நல்ல தீப்பு கூறுகிறேன் ஆனால் நீங்கள் இருவரும் நடந்தவற்றை அப்படியே செய்துக் காட்டுங்கள்' என்றது.

புலியைப் பார்த்து. 'நீங்கள் கூண்டிற்குள் எங்கு இருந்தீர்கள்?' என்றது.

புலியும் கூண்டினுள் சென்று.'இங்குதான்' என்று சொல்லும் போதே நரி மீண்டும் கூண்டை மூடியது. புலி இப்போது மீண்டும் கூண்டுக்குள் மாட்டிக் கொண்டது.

நரி புலியைப் பார்த்து சொல்லிற்று. 'உங்களைக் காப்பாற்றிய இந்ந்த மனிதனையே கொல்லத் துணிந்ததற்கு இதுதான் தண்டனை'

பின் வழிப்போக்கனைப் பாத்து, 'ஒருவருக்கு உதவி செய்யுமுன் (காப்பாற்றுமுன்) அவரின் குணத்தை அறிந்துக் கொள்ள வேண்டும். தீய குணம் உள்ளவர்களுக்கு உதவக் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றது.

நாமும் தீய குணம் உள்ளவர்களுக்கு உதவினால் துன்பத்தில் மாட்டிக் கொள்ள வேண்டி வரும். ஒருவரின் குணம் அறிந்து உதவ வேண்டும்.

மற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)

Written By Tamil News on Thursday, December 27, 2012 | 8:01 PM



செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்குச் சென்றான் அந்தச் சிறுவன். பல அழகிய நாய்க்குட்டிகள் அங்கே விற்பனைக்கு இருந்தன. விலை 500 ரூபாய் என்றார் கடைக்காரர். கடையின் ஒரு மூலையில் நாய்க்குட்டி ஒன்று தனியாக இருப்பதைப் பார்த்தான் அவன்.

"இது மட்டும் ஏன் தனியாக இருக்கிறது? இது விற்பனைக்கு இல்லையா?'' என்று கேட்டான் சிறுவன்.

"இது உடற் குறைபாடுள்ள குட்டி. ஒரு கால் இல்லாமலேயே பிறந்தது. ஆகவே இது விற்பனைக்கு இல்லை'' என்றார் கடைக் காரர்.

அந்தக் குட்டியைத் தூக்கி விளையாடிய சிறுவன், தனது பையில் இருந்து 500 ரூபாயை எடுத்து நீட்டினான். "இந்தக் குட்டியை வாங்கிக் கொள்கிறேன்'' என்றான்.

"இது விற்பனைக்கு இல்லை என்று சொன்னேனே! நீ வேறு நல்ல குட்டியை வாங்கிக் கொள்ளலாமே. கால் ஊனமான இந்த நாய்க்குட்டியை ஏன் தேர்ந்தெடுத்தாய்?'' என்றார் கடைக்காரர்.

சிறுவன், தான் அணிந்திருந்த கால் சட்டையின் கீழ்ப் பகுதியைத் தூக்கிக் காட்டினான். அங்கு அவனுக்கு மரத்தாலான ஒரு கால் இருந்தது.

உடற் குறைபாடு உள்ள சிறுவன், தன்னைப் போலவே ஒரு கால் இல்லாமல் இருந்த நாய்க்குட்டியின் உணர்வுகளையும் துயரங்களையும் புரிந்து கொள்ளும் பெரிய மனம் படைத்திருந்தான் என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

நீதி:- மற்றவரது இடத்தில் நம்மை வைத்து, அவர்களது பிரச்னைகளையும் துன்பங்களையும் புரிந்து கொள்ளும் மனமும் திறனும் நமக்கு வேண்டும்

தேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Download Manager



எமக்குத் தேவையான கோப்புகளை வேகமாகவும், துல்லியமாகவும் பதிவிற்ககம் செய்துகொள்ள இந்த மென்பொருள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த இலவச பதிவிறக்க மேலாளர் மென் பொருளானது முன்பை விட 600% வேகமாக கோப்புகளை பதிவிறக்குகிறது. இந்த மென்பொருள் மூலம் முழு வலைத்தளங்களை மீட்டெடுக்க முடியும். வலைத்தளங்கள் பதிவிறக்க போது இது உங்கள் இணைய இணைப்பினை ஒட்டுமொத்த பேண்ட்விட்த்தையும் பயன்படுத்துகிறது.


அம்சங்கள்: Internet Explorer, Opera, மற்றும் மோஸிலா ஃபயர்பாக்ஸ், சக்தி வாய்ந்த திட்ட ஒருங்கிணைப்பு,,
பிம்பங்கள் இருந்து பதிவிறக்கம் போக்குவரத்து பயன்பாடு, ZIP கோப்பு மற்றும் ஓடியோ / வீடியோ முன்பார்வை சரிசெய்கிறது.

பதிவிறக்கம் செய்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும் Download 

ஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்


தற்காலத்தில் பற்பல தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெற்றுச் செல்கின்றன என்பதை நாம் மறுப்பதிற்கில்லை, அதில் கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தக் கூடிய விடயங்களுடன் தொடர்பான பல விடயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.  இந்த வகையில் கையடக்க தொலை பேசியில் மனிதர்களை ஆடையின்றி துள்ளியமாக பார்க்கக்கூடிய தொழில் நுட்பம் வந்துள்ளது.

உங்கள் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டும் மென்பொருள் -போனில் கவல் தொழில் நுட்பத்தின் அபாரவளர்ச்சியின் காரணமாக இன்று மனத சமுதாயம் பல அரியக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளது. தகவல் தொழில் நுட்பத்தின் மூலமாக நாம் பெறும் நன்மைகள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும்
கூடிக் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் இப்போது வந்துள்ள மென்பொருளால் பெண்களுக்கு ஏற்படப்போகும் விபரீத விளைவுகள் ஏராளம் என்றே சொல்லலாம்.


ஜபோன் காமராவில் ஒரு வித மென்பொருளை நிறுவி, அதன் மூலம் சாதாரண ஆடை அணிந்து ருபவர்களை கூட ஆடைகளை நீக்கி நிர்வாணமாகக் காட்டுகிறது. இது ஐபோன் செய்து கொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இது வொரு பிரத்தியேக மென்பொருள் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆகையால் பெண்களே!  நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது அத்துடன் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான்.

கவலை கொள்ள வேண்டாம் (சிறுவர் கதை)




ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில் ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது. அந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் சென்று, "என்ன ஒரு கெட்ட அதிர்ஷ்டம்!" என்று கனிவோடு பேசினர். அதற்கு அந்த விவசாயி "இருக்கலாம்" என்று சொன்னார்.

மறுநாள் காலையில் ஓடிப் போன அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது. ஆனால் வரும் போது மூன்று குதிரைகளோடு வந்தது. அதை அறிந்தவர்கள், அவரிடம் "எவ்வளவு அற்புதம்" என்று ஆச்சரியத்தோடு வந்து பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று கூறினார்.

அடுத்த நாள் அந்த விவசாயி மகன் அந்த குதிரையின் மீது சவாரி செய்ய ஆசைப்பட்டு, குதிரையின் மீது ஏறினான். ஆனால் அந்த குதிரையோ அவனை கீழே தள்ளிவிட்டது. அதனால் அவனது கால் உடைந்துவிட்டது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரிடம் மறுபடியும் கனிவோடு பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று சொன்னார்.

மறுநாள் இராணுவ அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு இளைஞர்களை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கால் உடைந்த அந்த இளைஞனை பார்த்து, சென்றுவிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் அந்த அவரிடம் வந்து "என்ன பாக்கியம் செய்தீர்களோ உங்கள் மகனை விட்டு சென்றுவிட்டனர்" என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கும் அந்த விவசாயி "இருக்கலாம்" என்றே கூறினார்.

ஆகவே "எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம் நன்மைக்கே என்று ஏற்று கொள்ள வேண்டும்" என்பது நன்கு இக்கதையின் மூலம் புரிகிறது.

ஏமாந்த ஆட்டு வியாபாரி! - சிறுவர் கதை



ஒரு ஆள் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சின்னதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் தூரத்தில் இருந்தது.

அந்த ஆள் ஒரு அப்பாவிபோல் இருந்ததால் வழியில் பார்த்த நான்கு குடிகாரர்களுக்கு அந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிப் பறித்து விருந்துண்ண ஆசை ஏற்பட்டது.

அவன் போன பாதையிலேயே வேறு வழியில் முன்னால்போய் நால்வரும் தனித்தனியே கொஞ்சதூரம் இடைவெளி விட்டு வழியில் காத்திருந்தனர்.

அவன் பக்கம் வந்தவுடன் முதலாமவன் ஏய் எதுக்காக ஒரு கழுதைக் கட்டியைச் சுமந்து செல்கிறாய்? என்று கேட்டான். இவன் ஏமாறவில்லை. அவன் ஏதோ கேலி செய்கிறான் என்று சொல்லி சட்டை செய்யாமல் போனான்.

கொஞ்சதூரம் போனவுடன் இரண்டாமவன் எதிரில் வந்து, என்னப்பா எதுக்கு ஒரு பண்ணியைச் சுமந்துட்டுப்போறே? என்று சொல்லிச் சிரித்தான். இவனுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது.

மேலும் கொஞ்சதூரம் போனவுடன் மூன்றாமவன் எதிரில் வந்து. அட என்னப்பா செத்த பாம்பெ இப்படியா கழுத்துலெ சுத்திட்டுப் போவாங்க? என்றான். இவனுக்கு உண்மையாலுமே சந்தேகம் வந்துவிட்டது. என்ன இப்படி ஒவ்வொருத்தனும் ஒரு மாதிரியா சொல்லிட்டுப் போறான், நாம்ம வாங்குனது ஆட்டுக்குட்டிதானா அல்லது வேறெதாவது கிரகமா? என்று மிரண்டவனாய் நடந்தான்.

நான்காமவனும் எதிரில் வந்து ஏப்பா தனியா ஒரு பொணத்தத் தூக்கிட்டுப்போறே அப்படின்னு கேட்டான்.  அவ்வளவுதான் இவனுக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது. நாம்ம ஏதோ ஒரு குட்டிச் சாத்தனெ ஆட்டுக்குட்டின்னு நெனைச்சு ஏமாந்து வாங்கிட்டு வந்துட்டோம்! தூ கிரகம்! என்று செல்லி அந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கிப் புதரில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான்.

சிறிது நேரத்தில் அது அந்தக் குடிகாரர் நால்வருக்கும் உணவாயிற்று!

நீதி: நாம் ஏமாளியாக இருந்தால் மற்றவர் நம்மை எமாற்றுவது மிக எளிது.

Education

Powered by Blogger.
 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger