சீன ஓபன் டென்னிஸ் போட்டியின்
இறுதி ஆட்டத்தில் மரியா ஷரபோவா மற்றும்
விக்டோரியா அசரன்காக ஆகியோர் மோதுகின்றனர்.
பீஜிங்கில்
நடைபெறும் சீன ஓபன் டென்னிஸ்
போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில்
ரஷ்யாவின் மரியா சரபோவா சீனாவின்
லீ நாவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் சரபோவா, 6-4, 6-0 என்ற நேர் செட்
கணக்கில் லீ நாவை வீழ்த்தி
இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு
அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸின் விக்டோரியா அசரன்கா, பிரான்சின் மரியன் பட்டோலியை எதிர்கொண்டார்
இதில் அசரன்கா 6-4, 6-2 என்ற நேர் செட்
கணக்கில் பட்டோலியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி
பெற்றுள்ளார்.
இறுதி போட்டியில் சரபோவா, விக்டோரியா அசரன்காவை
எதிர்கொள்கிறார்.
No comments:
Post a Comment