அதிர்ச்சி தோல்வியில் முர்ரே - Tamil News அதிர்ச்சி தோல்வியில் முர்ரே - Tamil News
Headlines News :

Hottest List

Home » » அதிர்ச்சி தோல்வியில் முர்ரே

அதிர்ச்சி தோல்வியில் முர்ரே

Written By Tamil News on Saturday, November 24, 2012 | 7:36 PM


ஜப்பான் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் மிலாஸ் ராவ்னிக்கிற்கு எதிரான போட்டியில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் முர்ரே அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

6-3, 6-7, (7/5), 7-6 (7/4) என்ற செட்களில் முர்ரே அதிர்ச்சித் தோல்வியுற்றார். இறுதி செட்டில் 4- 1 என்று பின் தங்கியிருந்த நிலையில் செட்டை வெல்லும் நிலைக்கு உயர்ந்தார் முர்ரே ஆனால் ஒரு பிரேக் அது அனைத்தையும் முர்ரேயிற்கு எதிராக மாற்றிவிட்டது.

ராவ்னிக் 21 வயதான இளைஞர். உலகத் தரநிலையில் 15ஆம் தரநிலையில் உள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ராவ்னிக்கை வீழ்த்தி முன்னேறினார் முர்ரே. ஆனால் அப்போதே ராவ்னிக் அடுத்த முறை என்னை முர்ரே சந்தித்தால் அவருக்கு கடினம்தான் என்றார். சொன்னதை நிறைவேற்றியுள்ளார்.

மற்றொரு அரையிறுதியில் கீ நிஷிகோரி, பக்தாதிஸை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதியில் ராவ்னிக்கைச் சந்திக்கிறார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger