இடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் - Tamil News இடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

இடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

Written By Tamil News on Saturday, November 24, 2012 | 7:11 PM


பாடசாலை செல்லும் மாணவர்கள் கல்வியை இடையில் கைவிடுவதைத் தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையில் பிரதேசம் தோறும் விழிப்பூட்டல் ஊர்வலத்தினை நடத்தி வருகின்றது.

அதன் அடிப்படையில் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மற்றும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவர்களினால் இடை விலகலைத் தவிர்ப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்பூட்டல் ஊர்வலம் இடம்பெற்றது.

ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம். சுபைர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே. றகுமான், ஆசிரிய ஆலோசகர் எம்.பி. கான், ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். பரீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான ஊர்வலம் வாழைச்சேனை ஆலிம் வீதி, பிரதான வீதி, ஜும்ஆப் பள்ளிவாசல் வீதி வழியாக பாடசாலையை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது பாடசாலை இடை விலகலைத் தவிர்ப்போம் எனும் கருப் பொருளிலான துண்டுப் பிரசுரம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger