சிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன் - Tamil News சிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » சிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன்

சிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன்

Written By Tamil News on Tuesday, November 27, 2012 | 7:20 AM


ஜனநாயகத்தின் தோற்றுவாயான நடந்த உண்மைச் சம்பவம், இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சத்தம் போட்டதற்காக 6 வயது சிறுமி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதே காரணத்திற்காக கழுத்து அறுக்கப்பட்ட 10 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பள்ளியில் பயிலும் குழந்தைகள் தொடர்ந்து சத்தம் போட்டு வந்துள்ளனர்.

இப்பகுதியில் அவர்களின் சத்தம் அப்பகுதியைச் சேர்ந்த மதன் கோபி(35) என்பவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் அப்பள்ளிக் குழந்தைகள் மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த குழந்தைகள் வழக்கம் போல் சத்தம் போட்டுள்ளனர். இதனால் கடுப்பான மதன் கத்தியை எடுத்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த ஜஸ்மி மர்மு என்ற 6 வயது சிறுமியைக் குத்திக் கொன்றார்.

இதனால் ஆத்திரம் அடங்காத அவர் சிவாநாத் டிக்கி(10) என்ற சிறுவனின் கழுத்தை அறுத்தார். இதையடுத்து டிக்கி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த மக்கள் மதனைப் பிடித்த பொதுமக்கள் அவரை நைய்யப் புடைத்த பின்னர் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger