இல்லம் மனிதனின் அடிப்படைத் தேவையா? - Tamil News இல்லம் மனிதனின் அடிப்படைத் தேவையா? - Tamil News
Headlines News :

Hottest List

Home » » இல்லம் மனிதனின் அடிப்படைத் தேவையா?

இல்லம் மனிதனின் அடிப்படைத் தேவையா?

Written By Tamil News on Sunday, November 25, 2012 | 3:53 PM


1986 இல் உலக குடியிருப்பு தினம் ஐக்கிய நாடுகளி னால் பிரகடனப்படுத்தப்பட்டு இவ்வருடத்துடன் 26வது வருட விழாவினை உலகெங்கும் கொண்டாடுகின்றது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் வருகின்றன முதற் திங்கட்கிழமையை உலக குடியிருப்பு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தி, உலகம் முழுவதிலும் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் காணப்படுகின்ற ஐக்கிய நாட்கள் மனித குடியிருப்பின் அமையம் (ஹெபிடாட்) இது விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தி செயற்பட்டு வருவதோடு, ஒவ்வொரு வருடமும் உலகக் குடியிருப்பு தினத்திற்காக விசேட தொனிப்பொருளொன்றைப் பிரகடனப்படுத்தி உலகத்தின் பிரதான நகரமொன்றைப் பிரகடனப்படுத்தி சர்வதேச மட்டத்தில் இத்தினத்தைக் கொண்டாடி வருகின்றது.

மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகள் மூன்று உள்ளன. அவையாவன, உணவு, உடை உறையுள் என்பனவாகும். உணவு மனிதனின் உயிருக்கு ஆதாரமாய் அமைவது. உடை உடலுக்கு ஆதாரமாய் அமைவது. உறையுள் உயிர், உடல் இரண்டிற்கும் ஆதாரமாய் அமைவது. இவை மூன்றும் மனிதனின் அத்தியாவசியத் தேவையாக இருந்து வருகின்றன.

மனிதன் உலகிலேயே எப்போது தோற்றம் பெற்றானோ அப்போதே உணவுப் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. அவன் தட்ப வெப்ப நிலைகளின் தாக்கத்தையும் மான உணர்வையும் உணரத் தலைப்பட்ட போது உடைப் பிரச்சினை தோன்றிற்று. ஆனால் அவன் ஜீவனோபாயத்தின் பொருட்டு நிலையாகத் தங்கி வாழ முற்படும் வரை அவனுக்கு வீட்டைப் பற்றிய பிரச்சினை தோன்றவில்லை.

மனிதனின் நிரந்தரமான வாழ்க்கை யைத் தொடர்ந்தே அவனுக்கு வீட்டுப் பிரச்சினை ஏற்பட்டது. இன்று இந்த வீடு ஒரு குடும்பத்தின் இலட்சனம் ஆகவும் ஒரு மனிதன் உரிமை பாராட்டக் கூடிய அதி முக்கிய பொருளாகவும் மனித வாழ்வின் நீடித்த அத்தாட்சியுமாகவும் மாறிவிட்டது. குடும்பம் ஒன்றின் அமைதியின்மைக்கு முக்கிய காரணம் அவனுக்கென்று ஒரு நிரந்தர வீடில்லாமை ஆகும்.

மனித வாழ்க்கைக்கும் பொருத்த மற்ற வீடுகளில் வாழ்கின்ற மக்களின் வீட்டுத் தேவைகளையும் அதனோடு தொடர்புடைய சுற்றாடல் பிரச்சினை யையும் கருத்திற்கொண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்காகவே சகல நாடுகளிலும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறைகளுக்கு தனியான அமைச்சுக்களும் இருந்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பின் புள்ளி விபரங்களின்படி இலங்கை உட்பட அபிவிருத்தி அடைந்து வருகின்ற அநேகமான நாடுகளில் பெரும்பாலான மக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற குடியிருப்பிலேயே வாழ்ந்து வருகின்றனர். நகர்ப்புறங்களில் இப்பிரச்சினையானது மிகவும் உக்கிரமடைந்துள்ளது.

இன்று உலக மக்கள் தொகையில் நான்கிலொரு பங்கினரே நிலையான சொந்தமான வீடுகளில் வாழ்கின்றனர். ஏனையோர் வாடகை வீடுகளிலும் பஸ் நிலையங்களிலும் குடிசைகளிலும், சேரி வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த உண்மையை அண்மைக் காலங்களில் வெளியிட்ட புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

இவ்வுலகில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் இயற்கை அனர்த்தங்களினால் பல மில்லியன் கணக்கான மனித குடியிருப்புகள் அழிந்து வருகின்றன. 2020ஆம் ஆண்டளவில் 80 மில்லியன் புதிய வீடுகள் தேவைப்படும். ஆனால் இதுவரை எதுவிதமான தீர்க்கமான தீர்வுகளோ அல்லது திட்டங்களோ உலகில் எடுக்கப்படவில்லை.

உலகக் குடியிருப்பு அமையம் 2020ஆம் ஆண்டளவில் 100 மில்லி யன் சேரிகளை நிரந்தர ஆரோக்கிய வீடுகளாக மாற்றியமைத்துக் கொடுக்கும் திட்டத்தினை அங்கத்துவ நாடுகளிடையே பிரகடனப்படுத்தி யிருந்தது. அதில் இதுவரை அரை மில்லியன் வீடுகள் கூட அமைத்துக் கொடுக்கப்படவில்லை. அதிலும் ஆபிரிக்க நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஆசியாவில் ஏற்பட்டு வரும் இயற்கை அனர்த்தங்களினாலும் யுத்தங்களினாலும் வீடற்றோர் தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன் ஆபிரிக்க நாடுகளிடையே 60 வீதமானோர் வீடற்றோராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் சேரிப்புற மக்களுக்காக 66,000 வீடுகள் அமைக்கும் திட்டமும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஜனசெவன 10 இலட்சம் வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் நகரங்களில் இதுவரை 2000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் விரவன்சவின் ஜனசெவன வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் கிராமப்புறங்களில் மட்டும் இதுவரை 37 ஆயிரம் வீடுகள் கடந்த 2 வருட காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

உலகக் குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு இலங்கையில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்பு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நாடுபூராவும் நடாத்தி வருகின்றன. பாடசாலை மாணவர்களுக்கிடையே மாவட்ட மட்டம் தேசிய மட்டத்தில் வரைதல், நாடகம், பேச்சு, கட்டுரைப்போட்டி, வீதி நாடகம் போன்ற போட்டிகளை றடாத்தி வருகின்றன.

இப்போட்டிகள் தமிழ், சிங்கள மொழிகளில் நடத்தப்படுகின்றன. வெற்றிபெரும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய தின வைபவத்தில் பணப்பரிசில்களும் விருதுகளும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட உள்ளது. கொழும்பு மாநகரில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களிடையே பொருத்தமான நகரம், நகரை அழகுப்படுத்துவோம் போன்ற விழிப்பூட்டும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட அலுவலகங் கள் ஊடாக உலக குடியிருப்பு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. அத்துடன் குடியிருப்புக்களில் சிரமதானம் பழைய தொடர்மாடி வீடுகளை புனர்நிர்மாணம் செய்தல் போன்ற மக்கள் பங்களிப்பு வேலைத் திட்டங்களையும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நகர குடியிருப்பு அதிகார :(@8ளினால் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந் நிகழ்வுகள் செப்டெம்பர் 20ம் திகதி முதல் செப்டெம்பர் 30 திகதி வரை நடைபெறுகின்றன. தேசிய வைபவம் ஜனாதிபதி தலைமையில் ஒக்டோபர் 1ம் திகதி கொழும்பு நகர மைதானத்தில் நடைபெறும்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger