சூதாட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள் - அக்தார் - Tamil News சூதாட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள் - அக்தார் - Tamil News
Headlines News :

Hottest List

Home » » சூதாட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள் - அக்தார்

சூதாட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள் - அக்தார்

Written By Tamil News on Saturday, November 24, 2012 | 7:54 PMபாக். வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையே காரணம் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பொட் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டு அதிகளவில் சிக்கியவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆவர். இது குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சர்ச்சை நாயகன் சொஹைப் அக்தர் கூறும்போது,

ஸ்பொட் பிக்சிங் எங்களது கலாசாரம். ஏனென்றால் எங்களது வீரர்கள் குறைவான ஊதியம் பெறுகிறார்கள்.

குறிப்பாக சர்ச்சையில் சிக்கிய வீரர்கள் குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடியுள் ளனர். நானும் கடந்த 2008ம் ஆண்டு கார் வாங்கக் கூட பணம் இல்லாமல் சிரமப் பட்டு நண்பரிடம் கடன் வாங்கினேன். ஆனால், நான் எனது நிலைமையை சமாளி த்துவிட்டேன் என்றும் மற்றவர்கள் தவறான வழிகளில் சிக்கிக் கொள்கி ன்றனர் எனவும் கூறியுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவர் சல்மான் பட், மொஹமட் ஆமிர், மொஹமட் ஆசிப் ஆகியோர் ஸ்பொட் பிக்சிங் சர்ச்சையில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger