இந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார். - Tamil News இந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார். - Tamil News
Headlines News :

Hottest List

Home » , » இந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்.

Written By Tamil News on Friday, November 30, 2012 | 7:47 AM


தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் .கே. குஜ்ரால் (வயது 92) இன்று (30.11.2012) மாலை 3.27க்கு காலமானார். 1997-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டின் 12-வது பிரதமராக பதவி வகித்தவர் .கே. குஜ்ரால்.


இவரின் வரலாறு ஏட்டிலிருந்து....

1919-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் திகதி பிறந்த பஞ்சாப்பின் ஜீலம் பகுதி (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது) .கே.குஜ்ரால், 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றவர் தனது தேசப்பற்றை தெரிவித்தார்.


தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய .கே. குஜ்ரால், 1975-ல் அதாவது எமர்ஜென்சி அறிவிக்கப்படும்போது தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் குஜ்ரா. பின்னர் சோவியத் யூனியனுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.


1980களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா தளத்தில் இணைந்தார். 1989-ல் பஞ்சாப்பின் ஜலந்தர் எம்.பி. தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 1996-ம் ஆண்டு தேவகவுடா அமைச்சரவையிலும் வெளியுறவுத்துறை அமைச்சரானார். அதன் பின்னர் ஐக்கிய முன்னணியின் தலைவராக .கே. குஜ்ரால் தேர்வு செய்யப்பட்டு 13மாதங்கள் இந்தியாவின் 12-வது பிரதமராக பதவி வகித்தார்.


Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger