விமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை - Tamil News விமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை - Tamil News
Headlines News :

Hottest List

Home » , , » விமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை

விமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை

Written By Tamil News on Wednesday, November 28, 2012 | 4:49 AM


201  நாடுகளுக்கு விமானத்தின் உதவியில்லாமல் பயணம் செய்து பிரித்தானியாவைச் சேர்ந்த வாலிபர் சாதனை படைத்துள்ளார்.
இந்த இளைஞர் பிரித்தானியாவின் லிவர்பூல் மாகாணத்தைச் சேர்ந்த கிராஹம் ஹக்கிஸ் (வயது 33)  என்பராகும்.  கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதியன்று தனது சுற்றுப்பயணத்தை தொடக்கினார்.

எந்த சந்தர்ப்பத்திலும் வேறு நாட்டிற்கு செல்ல ஹக்கிஸ் விமானத்தை பயன்படுத்தவே இல்லை.
இவர் கடந்த 2009ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று (ஜனவரி 1ஆம் திகதி) தனது பயணத்தை தொடங்கி மொத்தம் 1,426 நாட்களில் 1லட்சத்து 60 ஆயிரம் மைல்கள் ( 2 லட்சத்து 46 ஆயிரம் கிலோ மீற்றர்கள்) பயணித்துள்ளர்.

மேலும் சில நாடுகளுக்கு கடலில் படகு மூலமாகவும், பக்கத்து நாடுகளுக்கு இரயில், பேருந்து, டொக்ஸி போன்ற வாகனங்கள் வாயிலாகவும் மொத்தம் 201 நாடுகளுக்கு சென்றார்.

கடைசியாக ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானை நேற்று சென்றடைந்தார். தற்போது அந்நாட்டின் தலைநகரம் ஜூபாவில் தங்கியுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் அதே புத்தாண்டு அன்று தாய்நாடு திரும்ப உள்ளார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger