உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01 - Tamil News உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01 - Tamil News
Headlines News :

Hottest List

Home » » உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01

Written By Tamil News on Friday, November 30, 2012 | 5:16 PM


மனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும் அவனால் சில நடவடிக்கைகளை விடாமல் இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக் கொள்ளும் இன்பங்களும், துன்பங்களும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படுவது தான் இங்கு விசேட அம்சமாகும்.

மனிதன் தோன்றிய காலம் தொட்டு இந்த பாலியல் நோய் இருந்து வந்தாலும் ஆனால் அது அடையாளம் காணப்படவில்லை என்பதும் ஒரு விசித்திரம். அவன் உலகில் தோன்றிய காலம் தொடக்கம் இறைவனால் பல வகையான அறிவுரைகள் காலத்திற்கு காலம் வழங்கப்பட்டும் உள்ளன. இதற்கான அறிவுரையும் அடங்கி இருப்பதாக இஸ்லாமிய சமயம் கூறுகின்றது. அதில் இந்த வகையான நோயும் ஒன்றாகும்.

மேலும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இதனை ஒழிப்பது என்பது யாராலும் முடியாத காரியம். ஆனால் அதனைக் குறைக்க முடியும் என்பது தான் கண்டு கொண்ட உண்மையாகும்.

மனிதனினால் தீர்க்கப்படாத பிரச்சினையில்  இந் நோயும் ஒன்றாம். காரணம் இந்த நோயின் அறிகுறி பல்வேறு கோலத்தில் உருவெடுப்பதால் அவனால் இதனை சரியான முறையில் அடையாளம் கண்டு அதற்கான மருந்தினை வழங்குவதில் இந்த மருத்துவ உலகிற்கே பாரிய சவாலாக விளங்குகின்றது.

உலகெங்கும் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். இதுவரை இந்நோயால் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பொதுவாகப் பரவி வரும் இத்தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என உலகம் முழுவதும் டிசம்பர் 1ம் திகதி எயிட்ஸ் தினமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்நிறுவனங்கள் கலந்து கொண்டு முடிவுகளை எடுக்கும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு இவ்வருடம் தென்னாபிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் ஜூலை மாதம் இடம்பெற்றது. 2011ம் ஆண்டு வியன்னாவிலும் 2012ம் ஆண்டு அமெரிக்காவின் வாசிங்டன் நகரிலும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
செப். 20, 2010. சஹாராவை அடுத்த 22 ஆப்ரிக்க நாடுகளில் HIV கிருமிகள் மற்றும் AIDS நோயை புதிதாகப் பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் 25 வீதம்  குறைந்துள்ளதாக எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கான .நா. அமைப்பான UNAIDS அறிவித்தது.

எயிட்ஸ் அதிகமாகப் பரவி வந்த ஆபிரிக்க நாடுகளில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் பரவலின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியே எனவும் இந்த .நா. அமைப்பு அறிவித்துள்ளது.

ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் அண்மைக் காலங்களில் எயிட்ஸ் நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

HIV/AIDS  பற்றிய அறிவை புதுப்பித்து கொள்வோம்
·         இந் நோய் (மனித பெற்ற நீர்ப்பீடண குறைபாட்டுச் சிக்கல்) HIV வைரஸ் (மனித நீர்ப்பீடண குறைபாட்டு வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது)
·         HIV தொற்று ஏற்பட்ட பின் நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு 8 – 10 வருடங்கள் போகும். ஆனால் இந்தக்காலப்பகுதியில் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றலாம்.
·         மருந்துகளினால் தொற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் முற்றாக குணப்படுத்த முடியாது
·         நீங்கள் HIV பற்றிய புரண அறிவை பெற்றிருந்தால், HIV தொற்றிலிருந்து  உங்களையும் காப்பற்றலாம்.
எவ்வாறு கடத்தப்படுகிறது
·         பாதுகாப்பற்ற ஊடுருவும் வகையிலான உடலுறவு
·         குருதியேற்றலின் போது தொற்றடைந்த குருதியைப் பெறல் அல்லது உறுப்பு மாற்றத்தின் போது தொற்றடைந்து குருதிப் பொருள்களைப் பெறல்.
·         தோற்றடைந்த ஊசிகளையும் புகுத்திகளையும் தோலை துழைக்கும் ஏனைய உபகரணங்களையும் பகிர்ந்து பயன்படுத்தல்.
·         HIV தொற்றடைந்த தாயிடமிருந்து தாய்ப்பாலுட்டுதல்,

HIV/AIDS  பின்வருவனவற்றால் கடத்தப்பட மாட்டாது
·         கட்டித்தழுவுதல்.
·         முத்தமிடல்.
·         கை குலுக்குதல்.
·         உண்ணும் பருகும் பாத்திரங்களை பகிர்ந்து பயன்படுத்துதல்.
·         நுளம்புக்கடி, ஏனைய புச்சிக்கடிகள்.
·         ஒரே தடாகத்தில் நீந்துதல்.
·         மல, சல கூட ஆசனங்களை பகிர்ந்த பகிர்நதளித்தல்.
இதனை எவ்வாறு தவிர்க்கலாம்
·         பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல்.
·         பாலுறவில் ஒரே துணைக்கு நம்பிக்கையாக இருத்தல்.
·         ஆணுறைகளை சரியாகப் பயன்படுத்துதல்
·         பாலியல் மூலம் கடத்தப்படும் நோய்களுக்கு சீராக சிகிச்சை பெறல்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger