November 2012 - Tamil News November 2012 - Tamil News
Headlines News :

Hottest List

குளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா?

Written By Tamil News on Friday, November 30, 2012 | 5:42 PM


குளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி... எலும்பை ஊடுருவும் குளிர்... படுக்கையை விட்டு எழவே மனமிருக்காது. ஒரு போர்வைக்கும் இரு தூக்கம் போடும் தம்பதிகள் முட்டல், மோதல் என உரசுவதில் அதிகாலையில் நெருப்பு பற்றிக் கொள்வது வாடிக்கைதான். அதிகாலையில் வாக்கிங் போக தயங்கினாலும், இந்த குளிர்காலத்தில் மார்னிங் ஷோவை தவிர்த்துவிடாதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் நம் உடம்பில் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாகத்தான் இருக்கும் என்பதால் செக்ஸ் உணர்வுகளும் கூட சற்று அடக்கமாகவே இருக்கும். எனவே அதற்காக அமைதியாக இருந்துவிடாமல் சின்னச் சின்ன ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்கின்றனர். அதற்கான ஆலோசனைகளையும் கூறியுள்ளனர் படியுங்களேன்.

 ஹோர்மோன் குறைவடைந்து போதல்…..
குளிர்காலத்தில் உடல் ரீதியாகவே நமது உடல் செக்ஸ் தேவையை நாடுவது குறையுமாம். இதற்கு ஹைபர்னேஷன் காலம் என்று பெயரிட்டுள்ளனர் முன்னோர்கள். இதனால் உடலின் மெட்டபாலிசமும் கூட குறையுமாம். இருந்தாலும் இதைத் தவிர்த்து செக்ஸ் ரீதியாக இயல்பாக இருக்க சில வழிகள் உள்ளன.

மூட்டு கிளப்பும் நீல ஒளி

கோடைகாலத்தில் இருப்பதைப் போன்றஉணர்வுகளுக்கு நாம் மனதைப் பழக்கிக் கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் இதை பழக்கப்பட்டு ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் லைட் தெரப்பி. நீல நிற விளக்கொளியில் துணையுடன் அமர்ந்து நேரத்தை செலவிட வேண்டுமாம். அப்போது நமது உடலுக்குத் தேவையான சூடு கிடைப்பதோடு, மனதிலும் மூடு கிளம்புமாம்.

இந்த நீல விளக்கானது, நமது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் பயோகிளாக்கை சரிப்படுத்தி நமது உடலில் இயக்கத்தை இயல்பாக்க உதவுகிறதாம். அதாவது கோடைகாலத்தில் நமது உடல் இருப்பதைப் போல மாறுமாம்.

தமது உடம்பில் சூடேற்றுங்கள் …….

கடும் குளிர்காலத்தில் மூடு வரும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் குளிர் கடுமையாக இருக்கும்போது செக்ஸ் உணர்வுகள் மங்குமாம். உடல் வெப்பநிலை குறையுமாம். இதனால் செக்ஸ் உணர்ச்சிகள் இருவருக்கும் குறைந்தே காணப்படுமாம். நமது உடலின் சருமம் சூடாக இருந்தால்தான் உணர்ச்சிகள் நிறைய வரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. நிறைய ஆண்களுக்கு கடும் குளிரை அனுபவிக்கும்போது எழுச்சியே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இதையும் சமாளிக்கலாம்.

நமது துணையின் உடைகள் …………..

உங்களது துணையின் உடையை எடுத்து சற்று நேரம் அணிந்து கொண்டு, அவருடைய நினைவில் மூழ்கினால் உடல் சூடு இயல்பாகுமாம். அதாவது கணவரின் சட்டையை மனைவி அணிந்து கொள்வது, மனைவியின் பிராவை எடுத்து கணவன் உடலோடு சேர்த்து வைத்துக் கொள்வது போல...மேலும் உடல் ரீதியான உராய்வுகளும் கூட சூட்டை ஏற்படுத்துமாம். இதன் மூலம் இயல்பு நிலைக்கு உடலைக் கொண்டு வர முடியுமாம்.

பாதம் சூடா இருக்கா?.........

பெண்களின் பாதம் சூடாக இருந்தால் செக்ஸ் மூடு நன்றாக இருக்குமாம்.இதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். அப்படி பாதம் சூடாக இருந்தால் பெண்களுக்கு எளிதில் ஆர்கஸம் வருமாம்.

இரவு லைட்டா சாப்பிடுங்க………

ராத்திரி சாப்பாட்டை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை குளிர்காலத்தில் கூடுமாம். இதனாலும் செக்ஸ் ஆசைகள் குறையுமாம். கோடை காலத்தை விட குளிர்காலத்தில் ராத்திரி சாப்பாடு, விருந்துகளால் உடல் எடை அதிகமாகும். அதாவது ஒரு கிலோ வரை கூடுமாம்.

இதைத் தவிர்க்க இரவு நேர விருந்துகளைக் குறக்க வேண்டும். குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றைக் குறைப்பது நல்லது. எளிதான சாப்பாட்டுக்கு மாற வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்பு சேருவது குறைந்து செக்ஸ் உணர்வுகள் வற்றாமல் தடுக்கலாம்.

இப்படிச் சின்னச் சின்னதாக சில உபாயங்களைப் பயன்படுத்தி உடல் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டு, செக்ஸ் உணர்வுகள் வற்றி விடாமல் தடுக்கலாம். சில்லென்று ரொமான்ஸை ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01


மனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும் அவனால் சில நடவடிக்கைகளை விடாமல் இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக் கொள்ளும் இன்பங்களும், துன்பங்களும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படுவது தான் இங்கு விசேட அம்சமாகும்.

மனிதன் தோன்றிய காலம் தொட்டு இந்த பாலியல் நோய் இருந்து வந்தாலும் ஆனால் அது அடையாளம் காணப்படவில்லை என்பதும் ஒரு விசித்திரம். அவன் உலகில் தோன்றிய காலம் தொடக்கம் இறைவனால் பல வகையான அறிவுரைகள் காலத்திற்கு காலம் வழங்கப்பட்டும் உள்ளன. இதற்கான அறிவுரையும் அடங்கி இருப்பதாக இஸ்லாமிய சமயம் கூறுகின்றது. அதில் இந்த வகையான நோயும் ஒன்றாகும்.

மேலும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இதனை ஒழிப்பது என்பது யாராலும் முடியாத காரியம். ஆனால் அதனைக் குறைக்க முடியும் என்பது தான் கண்டு கொண்ட உண்மையாகும்.

மனிதனினால் தீர்க்கப்படாத பிரச்சினையில்  இந் நோயும் ஒன்றாம். காரணம் இந்த நோயின் அறிகுறி பல்வேறு கோலத்தில் உருவெடுப்பதால் அவனால் இதனை சரியான முறையில் அடையாளம் கண்டு அதற்கான மருந்தினை வழங்குவதில் இந்த மருத்துவ உலகிற்கே பாரிய சவாலாக விளங்குகின்றது.

உலகெங்கும் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். இதுவரை இந்நோயால் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பொதுவாகப் பரவி வரும் இத்தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என உலகம் முழுவதும் டிசம்பர் 1ம் திகதி எயிட்ஸ் தினமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்நிறுவனங்கள் கலந்து கொண்டு முடிவுகளை எடுக்கும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு இவ்வருடம் தென்னாபிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் ஜூலை மாதம் இடம்பெற்றது. 2011ம் ஆண்டு வியன்னாவிலும் 2012ம் ஆண்டு அமெரிக்காவின் வாசிங்டன் நகரிலும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
செப். 20, 2010. சஹாராவை அடுத்த 22 ஆப்ரிக்க நாடுகளில் HIV கிருமிகள் மற்றும் AIDS நோயை புதிதாகப் பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் 25 வீதம்  குறைந்துள்ளதாக எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கான .நா. அமைப்பான UNAIDS அறிவித்தது.

எயிட்ஸ் அதிகமாகப் பரவி வந்த ஆபிரிக்க நாடுகளில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் பரவலின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியே எனவும் இந்த .நா. அமைப்பு அறிவித்துள்ளது.

ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் அண்மைக் காலங்களில் எயிட்ஸ் நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

HIV/AIDS  பற்றிய அறிவை புதுப்பித்து கொள்வோம்
·         இந் நோய் (மனித பெற்ற நீர்ப்பீடண குறைபாட்டுச் சிக்கல்) HIV வைரஸ் (மனித நீர்ப்பீடண குறைபாட்டு வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது)
·         HIV தொற்று ஏற்பட்ட பின் நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு 8 – 10 வருடங்கள் போகும். ஆனால் இந்தக்காலப்பகுதியில் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றலாம்.
·         மருந்துகளினால் தொற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் முற்றாக குணப்படுத்த முடியாது
·         நீங்கள் HIV பற்றிய புரண அறிவை பெற்றிருந்தால், HIV தொற்றிலிருந்து  உங்களையும் காப்பற்றலாம்.
எவ்வாறு கடத்தப்படுகிறது
·         பாதுகாப்பற்ற ஊடுருவும் வகையிலான உடலுறவு
·         குருதியேற்றலின் போது தொற்றடைந்த குருதியைப் பெறல் அல்லது உறுப்பு மாற்றத்தின் போது தொற்றடைந்து குருதிப் பொருள்களைப் பெறல்.
·         தோற்றடைந்த ஊசிகளையும் புகுத்திகளையும் தோலை துழைக்கும் ஏனைய உபகரணங்களையும் பகிர்ந்து பயன்படுத்தல்.
·         HIV தொற்றடைந்த தாயிடமிருந்து தாய்ப்பாலுட்டுதல்,

HIV/AIDS  பின்வருவனவற்றால் கடத்தப்பட மாட்டாது
·         கட்டித்தழுவுதல்.
·         முத்தமிடல்.
·         கை குலுக்குதல்.
·         உண்ணும் பருகும் பாத்திரங்களை பகிர்ந்து பயன்படுத்துதல்.
·         நுளம்புக்கடி, ஏனைய புச்சிக்கடிகள்.
·         ஒரே தடாகத்தில் நீந்துதல்.
·         மல, சல கூட ஆசனங்களை பகிர்ந்த பகிர்நதளித்தல்.
இதனை எவ்வாறு தவிர்க்கலாம்
·         பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல்.
·         பாலுறவில் ஒரே துணைக்கு நம்பிக்கையாக இருத்தல்.
·         ஆணுறைகளை சரியாகப் பயன்படுத்துதல்
·         பாலியல் மூலம் கடத்தப்படும் நோய்களுக்கு சீராக சிகிச்சை பெறல்.
கரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா?திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று நமது முன்னோர் கூறினார்கள். ஆனால் சில சினிமா நடிகை, நடிகர் வாழ்வில் அவை நீர்க்குமிழி போல் குறைந்த கால வரையறைக்குள் கலைந்து போவது தான் புதுமை.

இந்த வகையில் எவ்வளவு காலத்திற்கு, வொலிவுட் நடிகை கரீனா கபுர், செயிப் அலியின் திருமண வாழ்வு நிலைக்கும். உண்மையிலேயே கரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா? அல்லது அவரால் இஸ்லாத்தை பின்பற்றதான் முடியுமா? சுதந்திரப் பறவையாக சுற்றித்திருந்த இந்த நடிகை இன்று இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை பின்பற்றுவாரா?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும் இந்த வினாவுக்கு  

திருமண வாழ்வில் திருப்திப்பட சில வழிமுறைகள்


இந்த புதுமையான நவீன உலகில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் பெரும் மன அழுத்தத்துடன் செல்கிறது. அவ்வாறு செல்லும் வாழ்க்கையில் மன அழுத்தம் இருப்பதோடு, மண வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்தைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது. ஒரு காலத்தில் திருமணம் நடந்தால், அந்த தம்பதிகள் என்ன நடந்தாலும் இறுதி வரை ஒன்றாக  சேர்ந்து வாழ்வர்.

ஆனால் தற்போது, வாழ்வில் ஏதேனும் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால், அந்த வாழ்க்கை இறுதி வரை செல்லாமல், பாதியிலேயே முடிந்துவிடுகிறது. அதுவும் விவாகரத்து வரை செல்வதோடு, அந்த விவாகரத்தும் எளிதில் கிடைத்து பிரிந்து விடுகின்றனர். வாழ்வில் சந்தோஷம் மட்டும் என்பதில்லை, கோபமும் தான் இருக்கும். அவற்றையெல்லாம் வெற்றி பெற்று வாழ்வை வாழ்ந்து காண்பிப்பது தான் சிறப்பான ஒன்று.

எனவே,  எந்த பிரச்சனைகள் வரும் போதும், நமது கோபத்திற்கு இடத்தை கொடுக்காமல், வாழ்க்கையின் உண்மையை உணர முயற்சிக்க வேண்டும். அதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, பொறுமையோடு, விவகாரத்து தான் இதற்கு வழி என்று எண்ணாமல், மனதை அமைதிப்படுத்தி, ஒன்று சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

அவ்வாறு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அந்த கஷ்டமான தருணத்தை மட்டும் எண்ணாமல், சந்தோஷமாக இருந்த தருணத்தை நினைத்து, மனதில் இருக்கும் கோபத்தை வெளியேற்ற வேண்டும். சரி, இப்போது பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை நினைக்காமல், எந்த மாதிரியான இனிமையான நினைவுகளையெல்லாம் நினைத்து, திருமண வாழ்விற்கு முற்று ஏற்படாமல், நீண்ட நாட்கள் நிலைக்க வைப்பது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதல் நாள்
முதல் நாள் உங்கள் துணைவரை நேருக்கு நேராக கண் இமைக்காமல் பார்க்கும் படி செய்த அல்லது உங்கள் மனதில் காதல் எண்ணத்தை ஊட்டிய அந்த நாள் மிகவும் ஸ்பெஷலான மறக்க முடியாத ஒரு இனிமையான நாள்.


காதலில் விழுந்த நாள்
ஒருவருடன் பழகும் போது, நிச்சயம் ஒரு காலகட்டத்தில் அவரின் மீது காதல் இருப்பது புரிய வரும். அப்போது உணர்ந்த அந்த இனிமையான அனுபவத்தை நினைத்தால், அது வாழ்வில் மற்றும் மனதில் ஒருவித குதூகலத்தை உண்டாக்கும்.

முதல் நெருக்கமான தருணம்
இது முதன் முதலில் இருவரும் முத்தம் கொடுத்ததாகவோ அல்லது வேறு ஏதாவதான ஒருவித உணர்வை உணர்ந்த நாளாக இருக்கும். அதிலும் இந்த தருணத்தின் போது எப்போதுமே இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மனதில் தோன்றியிருக்கும்.
 நண்பர்கள்
நட்பு மற்றும் சந்தோஷமாக இருப்பது தான் ஒரு உறவின் முக்கியமான ஒரு பகுதி. இந்த நாட்களை வாழ்க்கை முடியப் போகும் தருணத்தில் நினைத்துப் பார்த்தால், அனைத்தும் கவலைகளும் மறந்து வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

முதல் வெளிப்படுத்திய நாள்
எதிர் பார்க்காத நேரத்தில் வாழ்க்கைத் துணை அதிர்ச்சியூட்டும் வகையில் காதலை சொன்ன அந்த நாளை யாராலும் மறக்க முடியாது.


திருமண நாள்
வாழ்வில் அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நாள் தான் திருமண நாள். அந்த நாளன்று இதுவரை தனியாக, காதலராக இருந்தவர்கள் ஒன்றாக இருக்கப் போகிறீர்கள் என்று பெரியோர்கள் அனைவரும் வாழ்த்துக் கூறி சேர்த்து வைக்கும், மனதின் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட நாள்.
 திருமணத்திற்கான ஷாப்பிங்
வீட்டில் திருமணத்திற்கான ஷாப்பிங் செய்யும் போதோ அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்யும் போதோ நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே வாழ்வின் ஒரு சந்தோஷமான நாளாக இருக்கும்.

தேனிலவு பயணம்
வாழ்வின் யாராலும் மறக்க முடியாத ஒரு பயணம் என்றால் அது தேனிலவு தான். அதிலும் இந்த பயணத்தின் போது அவர்கள் அந்த பயணத்தின் நினைவாக வளைத்து வளைத்து போட்டோக்களை எடுத்துக் கொள்வார்கள்.

முதல் சண்டை
திருமணத்திற்கு பிறகு சண்டைகள் நிறைய வரும். ஆனால் முதல் சண்டையை மட்டும் யாராலும் மறக்க முடியாது. அதிலும் அவ்வாறு வரும் சண்டை ஏதேனும் ஒரு சிறு விஷயத்திற்காகத் தான் இருக்கும்.

பெற்றோர் ஆன நாள்
இந்த தருணம் தான், தம்பதிகளுக்கிடையே இருக்கும் அன்பின் அடையாளம். சொல்லப்போனால் இதுவரை சாதாரணமாக இருந்த அவர்கள் பெற்றோர் என்ற உயர்ந்த நிலையை அடைந்த நாள்.

Education

Powered by Blogger.
 
Support : Creating Website | NewsTemplate | Mas Template
Copyright © 2011. Tamil News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger